கடலூர்: சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையில் பராமரிப்பில் இருந்த பாய்லரை பயன்பாட்டுக்கு கொண்டுவர பணிகள் நடைபெற்றபோது, அழுத்தம் காரணமாக இணைக்கப்பட்டிருந்த குழாய் வெடித்து சிதறியது. இதனால் தீப்பற்றி எரிந்தது.

கடலூர் சிப்காட் அருகே தீவிபத்து
கடலூர் சிப்காட் அருகே தீவிபத்து

இதனைகண்டு பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடலூர்
சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து - மளமளவென எரிந்த தீயால் பரபரப்பு

இதனிடையே வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

இதனிடையே தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லையென குற்றம்சாட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com