பற்றி எரிகிறது தீ: தி.நகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை தியாகராய நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடம் தீப்பிடித்து இடிந்து விழுந்ததால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு உஸ்மான் சாலை வழியாக வரும் வாகனங்கள், பசுல்லா சாலை வழியாகவும், உஸ்மான் சாலை மேம்பாலம் பயணியர் சாலை வழியாக சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக வரும் வாகன ஓட்டிகள், துரைசாமி சுரங்கப் பாதை வழியாக செல்லாமல், அதற்கு மாறாக ஆரிய கவுடா சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தெற்கு உஸ்மான் சாலையில் வரும் வாகன ஓட்டிகள், பர்கிட் சாலை மற்றும் மேட்லி சாலை வழியாக திரும்பிச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறும், பொதுமக்கள் யாரும் தீ விபத்துப் பகுதியைப் பார்க்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.