\
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரங்கில் தீ விபத்து

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரங்கில் தீ விபத்து

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரங்கில் தீ விபத்து
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை அருகே தீ விபத்து ஏற்பட்டது.

பொன்னேரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின்போது, ராட்சத எல்ஈடி டிவி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து பெரிய அளவில் கரும்புகை வந்ததால், மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு கருவிகளை கொண்டு தீயை கட்டுப்படுத்தினர்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com