\
FIR Filed Against TVK MLA Arul Vignesh
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்file photo

ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்.. ஆட்சியர் புகாரில் நடவடிக்கை.. FIR பதிவு!!

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Published on: 

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக, மூத்த அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஆட்சியர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் முறையான விசாரணை தேவை என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தவெக எம்எல்ஏ இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும், ஆட்சியரிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்web

இந்தச்சூழலில் தான், சென்னையை சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி என்பவர் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளி வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, நவம்பர் 11ம் தேதி டிஜிபியிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றம் நடந்ததாக கூறவில்லை; எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை  வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது என்றும், இந்த பிரச்னையில், கலெக்டர் புகார் கொடுத்தாரா? என்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட கலெக்டரிடம் விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையைதள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்file photo

இந்தச்சூழலில் தான், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக காவல்துறை தரப்பில் தகவல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. நேற்று புகாரளிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், எஸ்.பி.க்கு பதில் வேறு உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும். ஐஜி அல்லது டிஐஜி விசாரணையை கண்காணிக்க வேண்டும் என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27 வரை உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், அரசு தரப்பில் இருந்து யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில் தான், காவல்துறையினர் எம்.எல்.ஏ- அருள் விக்னேஷ் இல்லத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். இதையடுத்து, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

FIR Filed Against TVK MLA Arul Vignesh
கும்கி பட நடிகருக்கு ஓராண்டு சிறை.. சிறுமிகள் முன்பு ஆபாச செயல்.. போக்சோ வழக்கில் அதிரடி!