\
சென்னையில் பின்லாந்து பெண் மர்ம மரணம்..

சென்னையில் பின்லாந்து பெண் மர்ம மரணம்..

சென்னையில் பின்லாந்து பெண் மர்ம மரணம்..
Published on

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பின்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் மர்மமாக உயிரிழந்து கிடந்தார். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், ஹீலியா நே எமிலியா என்ற பெண் தனது நண்பர் ஒருவருடன் நேற்று இரவு தங்கியிருந்தாகக் தெரிகிறது. இந்நிலையில் அந்தப் பெண் உயிரிழந்த முறையில் கிடந்ததைக் கண்டு ஹோட்டல் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் மரணம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணுடன் வந்தவரைப்‌ பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com