\
கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி

கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி

கொரோனா விதிமீறல்: ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி
Published on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம், நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காவல் துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு அமலாக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவினர், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று ஒரு நாள் நடத்திய ஆய்வில் மட்டும், 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 400 ரூபாயும், அம்பத்தூர் மண்டலத்தில் 9 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com