இனி மனிதனை மட்டுமல்ல ! மரத்தை இடித்தாலும் ஃபைன் போடுவோம் !

இனி மனிதனை மட்டுமல்ல ! மரத்தை இடித்தாலும் ஃபைன் போடுவோம் !
இனி மனிதனை மட்டுமல்ல ! மரத்தை இடித்தாலும் ஃபைன் போடுவோம் !

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் மரத்தை இடித்து விபத்துக்குள்ளாக்கிய வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

கோவை மத்திய சிறை அருகிலுள்ள குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் நுழைவாயிலில் இருந்த மேஃபிளவர் மரத்தை அந்த வழியாக சென்ற சரக்கு லாரி மோதியதில் வேரோடு சாய்ந்தது. இதுதொடர்பாக நீதிமன்ற ஊழியர்கள், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பிடித்துக்கொண்டு மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.  இந்த விபத்து குறித்து "ஓசை"  அமைப்பு சார்பில் வருவாய்த்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட வடக்கு தாசில்தார் சிவக்குமார், மரத்தை பாதிப்புக்குள்ளாக்கியதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி மரத்தை சாய்த்ததற்கு  அபராதத்தை உறுதி செய்து வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு அபராதம் விதிக்க பரிந்துரை செய்தார். ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே அபராதம் விதிக்க தாசில்தாருக்கு அதிகாரம் உள்ள நிலையில், இந்த விபத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் அபராதம் விதிக்க வேண்டியுள்ளதால் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்ட  சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மரத்திற்கு மறுவாழ்வு, மரம் வெட்டுவது தடுப்பது என மரத்தை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மரத்தை விபத்துக்குள்ளானதற்கு அபராதம் விதித்த முதல் சம்பவம் மரம் பாதுகாக்கப்படுவதற்கான குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com