நாமக்கல்: நோயாளியை கூட்டிச்செல்ல காத்திருந்த வாகனத்திற்கு அபராதம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு அபராதம் விதித்ததை கண்டித்து ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ராசிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்க பணிகளால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியை சேர்ந்த சக்தி என்பவர் தனது உறவினரை ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தனது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவமனையில் காத்திருந்துள்ளார்.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அபராதம் விதிக்க முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து காவலருடன் ஓட்டுநர் சக்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிக்க: அமெரிக்கா: ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com