காலி மனைகளில் குப்பையை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பொன்னுசாமி தெருவில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு தடுப்பு முகாமை ஆய்வு செய்த மத்திய குழுவினர், அங்குள்ள பணியாளர்களிடம் சுகாதாரப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வில் மத்திய குழுவினருடன், தொற்றுநோய் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பேசிய ஆட்சியர், கொசு உற்பத்தியாவதற்கு இடமளிக்கும் வகையில் உள்ள நிறுவனங்களுக்கும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறினார்.

