காருடன் ஆள் கடத்தல்: ஃபைனான்சியர் உட்பட 5 பேர் கைது

காருடன் ஆள் கடத்தல்: ஃபைனான்சியர் உட்பட 5 பேர் கைது
காருடன் ஆள் கடத்தல்: ஃபைனான்சியர் உட்பட 5 பேர் கைது

சென்னையில் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக, ஆளை மாற்றி கடத்திய ஃபைனான்சியர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாலவாக்கம் பல்கலை நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவன், தனது சொகுசு காரின் ஆவணங்களைக் கொடுத்து சராஜ் என்பவரிடம் கடன் பெற்றிருந்தார். ஆனால் சராஜ், அந்த ஆவணங்களை தியாகராயர் நகரைச் சேர்ந்த பைனான்சியர் நரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து ஒன்றரை லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் பணத்தை திருப்பித்தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த பரமசிவனை, சராஜ் என நினைத்து, பைனான்சியர் நரேஷ் கோத்தாரியின் ஆட்கள் காருடன் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த பாண்டிபஜார் போலீஸார், பைனான்சியர்கள் நரேஷ், கமலேஷ், நண்பர்கள் பரமகுரு, கில்பட், பரமசிவம் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com