தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்முகநூல்

2021 - | திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதிநிலை எப்படி இருந்து வருகிறது?

திமுக ஆட்சியில் நிதிநிலை.
Published on

செய்தியாளர் ரமேஷுடன் கௌசல்யா

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2 நிதியமைச்சர்களை கண்டிருக்கிறது. நிதியமைச்சர்களின் சிறப்பங்சங்கள் என்ன? அவர்கள் பொறுப்பில் தமிழகத்தின் நிதிநிலை எப்படி இருந்து வருகிறது... பார்க்கலாம்...

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகிய இருவருமே தலைமுறை தலைமுறையாக திமுக பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பேற்றபோது முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றவர்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். 3 ஆண்டுகள் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் இவரே.

திமுக பொறுப்புக்கு வரும் முன் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரத்து 326 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021-22ஆம் நிதியாண்டில் 46 ஆயிரத்து 538 கோடி ரூபாயாகவும், 2022-23ஆம் நிதியாண்டில் 36 ஆயிரத்து 215 கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டபோது, தங்கம் தென்னரசுவிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 44 ஆயிரத்து 907 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 49 ஆயிரத்து 279 கோடி ரூபாயாக இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறையை சமாளித்தார் என்று சொல்லப்பட்டாலும் அது கொரோனா காலத்தில் இருந்து தமிழகம் மீண்டதால் ஏற்பட்ட விளைவு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன்.

தமிழக பட்ஜெட்
“இப்போதுதான் சிறையில் இருந்து வந்தார்.. அதற்குள்..” - செந்தில்பாலாஜியை விமர்சித்த அண்ணாமலை!

2023ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகான சில மாதங்களில்தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இத்திட்டம் திகழ்ந்தாலும், தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அரசு என்றால் செலவு செய்ய வேண்டும் என கருத்து தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன். எது எப்படி இருந்தாலும் தமிழக அரசின் கடன் சுமை என்பது அதிகரித்திருப்பதே அண்மைக்காலங்களில் பேசுபொருளாக உள்ள நிலையில், அதனை எப்படி சமாளிக்க போகிறது அரசு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com