குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை... தமிழக அரசு பரிசீலனை!

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க பரிசீலனை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியாயவிலை கடைகள் மூலம் இத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க பரிசீலனை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான செய்தியை இந்த வீடியோவில் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com