தமிழக பட்ஜெட் அறிவிப்பு : எந்த துறைக்கு எவ்வளவு ?

தமிழக பட்ஜெட் அறிவிப்பு : எந்த துறைக்கு எவ்வளவு ?

தமிழக பட்ஜெட் அறிவிப்பு : எந்த துறைக்கு எவ்வளவு ?
Published on

2019ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து வருகிறார்.

இந்தப் பட்ஜெட்டில், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை நடப்பு ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் உரையில் அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் பன்னீர்செல்வம், “ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். 

காவல்துறைக்காக ரூ.8,084 கோடி, குடிமராமத்து திட்டத்திற்கு 300 கோடி, தகவல் மற்று தொழில்நுட்பத்துறைக்கு ரூ.140 கோடி, திடீர் மழை, இடி, மின்னல், இயற்கை தீ ஆகிய பாதிப்புகளுக்கும் பயிர் காப்பீடு, உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.169.81 கோடி ஒதுக்கீடு, சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும், வேளாண் துறைக்கு ரூ.10,550 கோடி, சென்னை,கோவை, மதுரை ஆகிய இடங்களில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். சென்னை விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு, வருவாய் துறைக்கு மொத்தம் ரூ.6106.95 கோடி ஒதுக்கீடு, வீட்டு வசதி துறைக்கு ரூ.6,265 கோடி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு, தொழில்துறைக்கு ரூ.2,747 கோடியும், சுற்றுலாத்துறைக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.445 கோடி ஒதுக்கீடு” செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர், “பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.825 கோடி, ஓய்வூதிய நலன்களுக்காக ரூ.29,627 கோடி, கால்நடைத்துறைக்கு ரூ.1,252 கோடி, பால்வளத்துறைக்கு ரூ.285 கோடி, தமிழ் வளர்ச்சித்துறைக்காக ரூ.54.76 கோடி, உள்ளாட்சித்துறைக்கு ரூ.5,178 கோடி, சிறைத்துறைக்கு ரூ.319 கோடி, உள்ளாட்சித்துறைக்கு ரூ.18,278 கோடி, விவசாயத்துறைக்கு ரூ.10,550 கோடி, மீன்வளத்துறைக்கு ரூ.927 கோடி, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.13,605 கோடி, ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்திற்காக ரூ.1,772 கோடி” ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.766 கோடி, வேளாண்மை - தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி, விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.198 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ.4,584 கோடி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக 55,399 கோடி, மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.170.13 கோடி, கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கை மீட்டெடுத்து கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூ.100 கோடி,

நீர்வள ஆதாரம் மற்றும் பாசனத்துறைக்கு ரூ.5,983 கோடி, அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும், அணைகள் புனரமைப்புக்காக ரூ.43 கோடி, சென்னையை சுற்றியுள்ள வனப்பகுதியை பராமரிக்க ரூ.25 கோடி, பொதுப்பணித்துறையின் கீழ் ஏரிகளை தூர்வார ரூ.300, மின்சாரத்துறைக்காக ரூ.18,560 கோடி, அனைத்து கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி” என மொத்தம் அனைத்து துறைகளையும் சேர்த்து 2 லட்சத்து 63 ஆயிரத்து 828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com