`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி

`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு, தற்போது விலையை குறைக்கச் சொல்லி மாநிலங்களிடம் கேட்பதுதான் கூட்டாட்சியா என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், `2014-ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு, எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல் விலையை 23 ரூபாய், அதாவது 250 சதவீதமும், டீசல் விலையை 29 ரூபாய், அதாவது 900 சதவீதமும் உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தியதில் இருந்து தற்போது அதில் 50 சதவீதத்தை குறைத்துவிட்டு, மாநிலங்களை குறைக்கச் சொல்லி கேட்கின்றனர், இதுதான் கூட்டாட்சியா?’ என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com