\
'கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம்' - யூஜிசி திட்டவட்டம்

'கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம்' - யூஜிசி திட்டவட்டம்

'கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம்' - யூஜிசி திட்டவட்டம்
Published on

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பதில் மனுதாக்கல் செய்துள்ளது

கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு பதில் மனுதாக்கல் செய்துள்ளது

முன்னதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் தாக்கல் செய்த பதில் மனுவில் ''அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யு.ஜி.சி. விதிகளுக்கு புறம்பானது. இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கும் முரணானது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com