101 ஆண்டுகளாக ஃபிலிம் ரோல் புரொஜக்டரை பயன்படுத்தும் திரையரங்கம்

101 ஆண்டுகளாக ஃபிலிம் ரோல் புரொஜக்டரை பயன்படுத்தும் திரையரங்கம்
101 ஆண்டுகளாக ஃபிலிம் ரோல் புரொஜக்டரை பயன்படுத்தும் திரையரங்கம்

ஃபிலிம் ரோல் புரொஜக்டரை பயன்படுத்தும் திரையரங்கம் ஒன்று 101 ஆண்டுகள் தாண்டி ‌சென்னையில் இன்றும் இயங்கி வருகிறது. 

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தாலும், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமல் இயங்கி வருகிறது. மினர்வா என்ற பெயரில் இயங்கி வந்த திரையரங்கம், தற்போது பாட்ஷா என்ற பெயரில் பழமையை பறைசாற்றி வருகி‌றது. 101 ஆண்டுகளாக ஃபிலிம் ரோல் புரொஜக்டரை மட்டுமே இந்த திரையரங்கில் பயன்படுத்துகின்றனர். திரையரங்குகள் டிஜிட்டல், 3டி என பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பாட்ஷா இன்றும் பழமையை பறைசாற்றி வருகி‌றது  .  

இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் வருமா‌னம் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது போன்ற பழமையான திரையரங்குகளுக்கு அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் உரிமையாளர் எஸ்.எம்.பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com