’சமூக நீதியைக் காப்பாற்றும் INDIA கூட்டணி’.. ஆதரவு தெரிவித்த ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல்!

INDIA கூட்டணிக்கு இயக்குநர் ஞானவேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஞானவேல்
ஞானவேல்ட்விட்டர்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் தேர்தல் திருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றன. இதற்கான அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதற்கிடையே தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணிமுகநூல்

அந்த வகையில், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கும் INDIA கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார், இயக்குநர் ஞானவேல். இவர், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ என்ற படத்தை இயக்கியிருந்தவர் ஆவார். ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையின் படத்தையும் இவர்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” எனப் பதிவிட்டிருக்கும் அவர், ” இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன” எனத் தெரிவித்திருக்கும் அவர், அக்கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருப்பதுடன், தன்னையறிந்தவர்களிடமும் அக்கூட்டணிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: Fact Check|ஈரானிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினாரா ஜோர்டான் இளவரசி.. வைரலான செய்தி.. உண்மை என்ன?

ஞானவேல்
”‘ஜெய் பீம்’ ஆஸ்கர் வரை சென்றது போனஸ்தான்” - இயக்குநர் தா.செ ஞானவேல் சிறப்புப் பேட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com