’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கொடுக்கும் திரைப் பிரபலங்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ’மறக்குமா நெஞ்சம்’ சென்னை பனையூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முறையாக இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலைப் பதிவிடும்படி ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பல்வேறு தரப்பினரும் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com