தமிழ்நாடு
சொத்துகளின் விவரங்களை தாக்கல் செய்திடுக - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
சொத்துகளின் விவரங்களை தாக்கல் செய்திடுக - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் உத்தரவின்படி வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள்ளாக சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சரியான காரணம் இன்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.