\
சாத்தான்குளம் வழக்கில் பெண்களின் சாட்சியங்களை தாக்கல் செய்க - சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் பெண்களின் சாட்சியங்களை தாக்கல் செய்க - சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் பெண்களின் சாட்சியங்களை தாக்கல் செய்க - சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு
Published on

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை மற்றும் பெண் சாட்சியங்களை தாக்கல் செய்ய சிபிஐக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கானது, சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அண்மையில் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 காவலர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செயதது. 

இந்நிலையில் சிறையில் உள்ள காவலர்கள் பிரான்சிஸ், முத்துராஜ், முருகன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காவலர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை மற்றும் பெண் சாட்சியங்களை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com