சென்னை புழல் மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.
உளவு பார்த்ததாக துருக்கி நாட்டை சேர்ந்த ராணுவ வீரரான மஹிர் டெர்விமும், போதைப் பொருள் கடத்திய வழக்கில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த டொமிங்கோஸ் மற்றும் டயாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.. இந்த நிலையில், சிறையின் கழிப்பறை பகுதியில் துருக்கி நாட்டை சேர்ந்த மஹிர் டெர்விமுக்கும், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இருவரையும் துருக்கி நாட்டை சேர்ந்த மஹிர் டெர்விம், கல்லால் தாக்கியுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து சிறை காவலர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் இருவரையும் மீட்டு, சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.