\
இனி ஞாயிறு தோறும் மெட்ரோவில் 50%தான் கட்டணம்

இனி ஞாயிறு தோறும் மெட்ரோவில் 50%தான் கட்டணம்

இனி ஞாயிறு தோறும் மெட்ரோவில் 50%தான் கட்டணம்
Published on

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

விரைவான போக்குவரத்திற்காகவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. வார நாட்களில் சென்னை மெட்ரோவில் ஏராளமான பயணிகள் பயணம் செய்வதைவிட ஞாயிற்றுக்கிழமையில் அதிகம் பேர் பயணம் செய்வதாக தெரிகிறது.

இதன் காரணமாக வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் சேவைகள் இயங்கி வந்ததை மாற்றி பயணிகள் கோரிக்கையை ஏற்று காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க முடிவெடுத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அண்மையில் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை நாட்களிலும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com