தமிழகத்தில் தொடரும் காய்ச்சல் மரணங்கள்: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தொடரும் காய்ச்சல் மரணங்கள்: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தொடரும் காய்ச்சல் மரணங்கள்: ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு
Published on

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். 

நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். கீழ்வேளூரை அடுத்துள்ள ஆணைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுதர்சன். 11ஆம் வகுப்பு படித்துவந்த இவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் சுதர்சன் உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நரேஷ்குமார் என்ற 9 வயது சிறுவன் உயிரிழந்தார். 

தர்மபுரி ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது. வேதாரண்யம் அருகே நெய் விளைக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி அனுசுயா டெங்குக்கு பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியநேந்தலில் இரண்டரை வயது குழந்தை சிவகுரு காய்ச்சலுக்கு உயிரிழந்தது. இதேபோல், திண்டுக்கல் தோண்டணுத்து சேர்ந்த 13வயது சிறுவன் சையது அப்ரீடி, மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டியில் இளம்பெண் நத்தினி என்பவரும் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com