தமிழ்நாடு
தமிழகத்தில் காய்ச்சலால் இன்று 5 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் காய்ச்சலால் இன்று 5 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளால் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பா.நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரியா என்பவர் ஒருவாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த ராஜா, ஜான்பாஷா ஆகியோரும் காய்ச்சல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தில் முகமது ரியான் என்ற ஒருவயது குழந்தை வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள் அகஸ்தம்பாடியில் ஒன்றரை வயது யுவஸ்ரீ என்ற குழந்தையும் காய்ச்சலால் உயிரிழந்தது.