\
பண்டிகை காலம்: முட்டை விலை கிடு கிடு உயர்வு - மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்

பண்டிகை காலம்: முட்டை விலை கிடு கிடு உயர்வு - மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்

பண்டிகை காலம்: முட்டை விலை கிடு கிடு உயர்வு - மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்
Published on

நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாயானது முட்டை விலை. 12 நாட்களில் 50 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 15 காசுகளும், 6-ம் தேதி 20 காசுகளும், 9-ம் தேதி 5 காசுகளும் உயர்ந்து தற்போது பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் ஒரேநாளில் 10 காசுகள் விலை உயர்ந்து 5 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 நாட்களில் 50 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது... வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கிய நிலையில், முட்டை நுகர்வு அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது.

அதே சமயம் வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை ஒட்டி கேக் தயாரிக்கும் பணிக்கு முட்டைகள் அதிகளவு கொள்முதல் செய்யப்படுவதால், தமிழகத்திலும் முட்டை தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர்வற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com