\
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தொடக்கம்
Published on

திருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக, மாசித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தாண்டு மாசித் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக செப்பு கொடிமரத்திற்கு 16வகையான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான, மாசித் திருவிழா தேரோட்டம் வருகிற 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com