நாத உற்சவ இசை விழா: கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை வாசித்த நாதஸ்வர கலைஞர்கள்

நாத உற்சவ இசை விழா: கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை வாசித்த நாதஸ்வர கலைஞர்கள்
நாத உற்சவ இசை விழா: கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை வாசித்த நாதஸ்வர கலைஞர்கள்

கரூரில் 400-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவ இசை விழாவில் ஏராளமான இசை பிரியர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.

கரூர் மாவட்டம் நெரூரில் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாத உற்சவம் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சிறப்பு அம்சமாக 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக இன்னிசை வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், 13-ஆம் ஆண்டு நாத உற்சவ விழா நேற்று நடைபெற்றது. இதில், அருள்மிகு அக்னீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையை தொடர்ந்து அருளுரை, தேவார பண்ணிசையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மாலை நடைபெற்ற நாத உற்சவ விழாவில் 400-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் கலந்து கொண்டு கர்நாடக சங்கீதத்தில் பல்வேறு கீர்த்தனைகளை சுமார் 3 மணி நேரம் வாசித்தனர். இதை இசை ஆர்வலர்கள் கேட்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com