மதுரையில் கந்துவட்டி பிரச்னையால் தற்கொலைக்கு முயன்ற பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரையை அடுத்த பழைய விளாங்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி மாரீஸ்வரி. அதே பகுதியைச் சேர்ந்த தங்கம் மற்றும் அவ்வையார் என்ற இரு பெண்களிடம் 3 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடனாக பெற்றுள்ளதாக தெரிகிறது. 3 வருடமும் வட்டி கட்டி வந்த நிலையில், சமீப காலமாக வட்டி கட்டாததால் மாரீஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி இரண்டு பெண்களும் மனஉளைச்சல் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்த மாரீஸ்வரியை, உறவினர்கள் மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

