\
பிறந்த நாளன்று பெண் செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு

பிறந்த நாளன்று பெண் செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு

பிறந்த நாளன்று பெண் செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு
Published on

திண்டுக்கல் கொடைரோடு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெண் செய்தியாளர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் வசிக்கும் அங்கையற்கன்னி என்பவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சக ஊழியர்களான, ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபு ராஜ் ஆகியோர் காரில் பள்ளப்பட்டிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கையற்கன்னியை பார்த்துவிட்டு அவர்கள் சென்னை திரும்பிய போது பொட்டிகுளம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஷாலினி உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஷாலினி மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாலினி தனது பிறந்த நாளன்று இறந்தார் என்பது வருந்தத்தக்க ஒன்றாக அமைந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com