பெண் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
பெண் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்புpt de

திருச்சி: ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்து – பெண் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

முசிறி அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர்.
Published on

செய்தியாளர்: சந்திரன்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே, அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ருக்மணி என்பவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது மோதி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஆட்டோ முழுவதும் சேதமடைந்த நிலையில், பெண் ஆட்டோ ஓட்டுநர் ருக்மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்துpt desk

மேலும் ஆட்டோவில் வந்த பெண் பயணியும், பேருந்தில் வந்த நடத்துநர் துறையூரைச் சேர்ந்த சேகர் உட்பட 9க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார், ருக்மணியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

பெண் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
திருப்பத்தூர்: கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக 3 பேர் கைது

இதைத் தொடர்ந்து முசிறி போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com