உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.12.60 லட்சம் நிதி திரட்டிய சக காவலர்கள்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.12.60 லட்சம் நிதி திரட்டிய சக காவலர்கள்
உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.12.60 லட்சம் நிதி திரட்டிய சக காவலர்கள்

அரூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன் பயிற்சி பெற்ற காவலர்கள் ரூ.12.60 இலட்சம் நிதி திரட்டி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொய்யப்பட்டியைச் சேர்ந்த காவலர் வெங்கட்ராமன். இவர் பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே காவலர் வெங்கட்ராமனுடன் 2013 ஆம் ஆண்டில் காவலர் பயிற்சி எடுத்து வந்த பலர் தமிழகம் முழுவதும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அந்த காவலர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளத்தின் மூலம் ஒன்றிணைந்து வெங்கட்ராமன் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டியுள்ளனர்.

இதில் வந்த 12 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை வெங்கட்ராமன் குடும்பத்தினரிடம் கொடுத்து அவரின் மனைவி லிவீனா, குழந்தைகள், பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com