சதுரங்கவேட்டை பட பாணியில் ‘ரைஸ் புல்லர்’ மோசடி

சதுரங்கவேட்டை பட பாணியில் ‘ரைஸ் புல்லர்’ மோசடி
சதுரங்கவேட்டை பட பாணியில் ‘ரைஸ் புல்லர்’ மோசடி

டெல்லியில் தொழிலதிபரிடம் பித்தளைத்தட்டை காட்டி சுமார் 1கோடியே 43 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் நரேந்தர். இவர் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை சந்தித்த விரேந்தர் மற்றும் நிதின் மோகன்  ‘ரைஸ் புல்லர்’ என்ற வார்த்தையை கூறி ஆசைக்காட்டியுள்ளனர். ரைஸ் புல்லர் என்ற வார்த்தை கேட்க புதிதாக இருந்ததால் நரேந்தருக்கு இதுகுறித்து ஆர்வம் அதிகமாகியுள்ளது. மேலும் அவர்கள் பேசியது இவருக்கு பேராசையை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஆவலையும் பேராசையையும் பயன்படுத்திய அந்த நபர்கள் இந்த ரைஸ் புல்லிங்கால் உங்களுக்கு  பல கோடி லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். ரைஸ்புல்லர் எனக்கூறி ஒரு பித்தளை தட்டை காண்பித்துள்ளனர்.

இதனை சோதனை செய்து காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளனர். ரைஸ் புல்லர் ஆர்வத்தால் அவரும் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் தலைமறைவாகினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரேந்தர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் தந்தை மகன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து விஞ்ஞானிகள் அணியும் உடை மற்றும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com