\
காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ: தீக்குளிக்க முயன்ற மணமகளின் தந்தை

காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ: தீக்குளிக்க முயன்ற மணமகளின் தந்தை

காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ: தீக்குளிக்க முயன்ற மணமகளின் தந்தை
Published on

காதல் திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. தியாகதுருகத்தை சேர்ந்தவர் சாமிநாதன் - மாலா தம்பதியினரின் மகள் சௌந்தர்யா. பிரபுவும், சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ பிரபு தனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று அதிகாலை சௌந்தர்யாவை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.

இதையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் எம்.எல்.ஏ பிரபு வீட்டின் முன்பு துரோகம் செய்துவிட்டாய் என்று கூறி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த தியாகதுருகம் போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com