கிணற்றில் மின் மோட்டாரை பழுது நீக்கச் சென்ற மாமனார், மருமகன் விஷவாயு தாக்கி பலி

கிணற்றில் மின் மோட்டாரை பழுது நீக்கச் சென்ற மாமனார், மருமகன் விஷவாயு தாக்கி பலி
கிணற்றில் மின் மோட்டாரை பழுது நீக்கச் சென்ற மாமனார், மருமகன் விஷவாயு தாக்கி பலி

விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுது நீக்கச் சென்ற மாமனார் மருமகன் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பகுதியைச் சேர்ந்த மணி, சிவா என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், கிணற்றில் உள்ள மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்க கிணற்றில் இறங்கிய மாமனார் மணி, கிணற்றிலிருந்து வெளியே வராததால் மருமகன் சுபாஷ் கிணற்றில் இறங்கி மாமனாரை காப்பாற்றச் சென்று அவரும் அதில் சிக்கிக் கொண்டார்.

நீண்ட நேரமாகியும் இருவரும் வராததை அறிந்த உறவினர்கள், அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறை மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் வந்து மணி மற்றும் சுபாஷ் ஆகியோரை சடலமாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விவசாய கிணற்றில் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com