கறிவிருந்துக்கு வந்த மாப்பிள்ளையை வெட்டிக்கொன்ற மாமனார்.. பதிலுக்கு நண்பர்கள் செய்த செயல்!

கறிவிருந்துக்கு வந்த மாப்பிள்ளையை வெட்டிக்கொன்ற மாமனார்.. பதிலுக்கு நண்பர்கள் செய்த செயல்!
கறிவிருந்துக்கு வந்த மாப்பிள்ளையை வெட்டிக்கொன்ற மாமனார்.. பதிலுக்கு நண்பர்கள் செய்த செயல்!

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை முத்தரசனை அவரது மாமனாரே கொலைசெய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய நண்பன் முத்தரசன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மாமனர் வீட்டை அவர்கள் சூறையாடி தீ வைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு மகன் முத்தரசன் (23). முத்தரசனுக்கும் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள மங்கலநாயகிபுரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு முத்தரசன் தனது மனைவியுடன் சென்று அங்கேயே தங்கியிருந்துள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் மாமனார் ரவிச்சந்திரன் கோபத்தில் மருமகன் முத்தரசனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து போலீஸார் ரவிச்சந்திரனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனால் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த சிலர், அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து வீட்டிற்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் தீயை அணைத்துவிட்டு போலீஸார் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்குச் சென்று போலீஸார் விசாரித்தில் கொலை செய்யப்பட்ட முத்தரசனின் நண்பர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு தெரியவந்தது. முதல் கட்டமாக போலீஸார் சிங்களாந்தியைச் சேர்ந்த முத்தரசனின் நண்பர்களான சந்திரபோஸ் (23), பிரகாஷ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com