\
நாகை : தென்னை மரம் ஏறும்போது மகள் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

நாகை : தென்னை மரம் ஏறும்போது மகள் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

நாகை : தென்னை மரம் ஏறும்போது மகள் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

நாகையில் மின்சாரம் தாக்கியதில், மகளின் கண்ணெதிரே தந்தை உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் போலகத்தைச் சேர்ந்தவர் பிலிப்தாஸ். இவர் நாகை மாவட்டம் செல்லூர் கிராமத்தில் உள்ள தனது மகள் ஜெசிந்தாமேரியை பார்ப்பதற்காக இன்று அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் வாசல் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் ஏறிய பிலிப்தாஸ், மரத்திலிருந்த தென்னங்கீற்றுகளை கத்தியினால் வெட்டி கொண்டிருந்தார். அப்போது தென்னை மரம் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரம் திடீரென்று பிலிப்தாஸ் மீது பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் பிலிப்தாஸ் தனது மகள் கண்ணெதிரிலேயே பரிதாபமாக தென்னை மட்டையின் இடையில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து பிலிப்தாஸின் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com