மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழப்பு

மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழப்பு
மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டியில் மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(75). இவரது மகன் ராஜாங்கம்(46). ராஜாங்கத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள் 1 மகன் உள்ளனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ராஜாங்கம் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று வயிற்றுவலி காரணமாக ராஜாங்கத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் ராஜாங்கம் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான அரையப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அவரது உடலை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது, மகன் இறந்ததை அறிந்த ராஜாங்கத்தின் தந்தை ஆறுமுகம் கதறி அழுதார். அப்போது துக்கம் தாளாத அவருக்கு திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அருகில் இருந்த மருத்துவர்களை அழைத்து வந்து சோதனை செய்தபோது ஆறுமுகமும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தக் கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com