தமிழ்நாடு
தந்தையால் எரிக்கப்பட்ட மகள் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தந்தையால் எரிக்கப்பட்ட மகள் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மதுரையில் தந்தையால் எரிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காளீஸ்வரன் என்பவர் தன்னுடைய மனைவி லதா மற்றும் மகள் மகாலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 4ஆம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தார்.
இச்சம்பவத்தில் மனைவி இறந்த நிலையில், மகள் மகாலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் காளீஸ்வரன் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.