அரக்கோணம்: மின்சாரம் தாக்கி துடிதுடித்த தந்தையும். காப்பாற்ற முயன்ற மகனும் பலியான சோகம்
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (35). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கோணலம் பகுதியில் வசிக்கும் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தனது குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரனின் நிலத்திற்கு அருகே உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான வயலின் மீன் பிடிப்பதற்காக தனது மகனுடன் பாக்கியராஜ் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி வயலில் விழுந்து பாக்கியராஜ் துடித்துள்ளர்.
இதனைக்கண்ட மகன் அருண்குமார் தந்தையை மீட்க முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம் என்பவர் தனது வயலில் உள்ள பயிர்களை எலியிடம் இருந்து காப்பதற்காக வைத்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் மீன் வளத்துறை வருவாய்த்துறை உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமாக செல்வம் என்பவர் நிலத்திற்கு மின் கம்பத்தில் இருந்து திருட்டுத் தனமாக மின்சாரம் எடுத்து வயலுக்கு மின்சார வேலி அமைப்பது குறித்து மின்வாரிய துறையினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.