\
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்!
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 12 மணி நேர உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக்கோரியும் கடந்த 83 தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆலையை மூடவலியுறுத்தி பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் எதிரே ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் கறுப்பு கொடியினை ஏற்றி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 12 மணி நேர உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com