உழவர்களுக்காக இளைஞர்கள் உண்ணாவிரதம்

உழவர்களுக்காக இளைஞர்கள் உண்ணாவிரதம்

உழவர்களுக்காக இளைஞர்கள் உண்ணாவிரதம்
Published on

விவசாயிகளுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, இளைஞர்கள், மாணவ- மாணவிகள், சமூக ‌ஆர்வலர்கள் என ஏராளமானோர் இன்று ஒரு நாள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சமூக ஊடகங்கள் வழியாக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ‌பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் இளைஞர்களும், மாணவர்களும், விவசாயிகளை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு திரைப்பட இயக்குநர்கள் அமீர், கவுதமன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com