பாஸ்ட் டேக் கட்டாயமானால் இந்த சிக்கல்களெல்லாம்இருக்கும்- வாகன ஓட்டிகள் சொல்லும் காரணங்கள்

பாஸ்ட் டேக் கட்டாயமானால் இந்த சிக்கல்களெல்லாம்இருக்கும்- வாகன ஓட்டிகள் சொல்லும் காரணங்கள்
பாஸ்ட் டேக் கட்டாயமானால் இந்த சிக்கல்களெல்லாம்இருக்கும்- வாகன ஓட்டிகள் சொல்லும் காரணங்கள்

வரும் ஜனவரி 1 முதல் பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப் படுகிறது இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியை தற்போது தினந்தோறும் 5000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதன் மூலம் 24 மணிநேரத்தில் 15 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. 

சுங்கச் சாவடிகளில் பாஸ்ட் டேக் நடைமுறை வந்ததற்குப் பிறகு பத்து லட்ச ரூபாய் வசூலிக்க பட்டால் அதில் ஏழு லட்ச ரூபாய்  பாஸ்ட் டேக் மூலமும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் வசூலிக்கப்படுவதுதாக கூறுகின்றனர். மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள பாஸ்ட் டேக் நடைமுறை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் முழுவதுமாக நடைமுறை படுத்தப்படும் போது சிக்கல்கள் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக பாஸ்ட் டேக் முறை கனரக வாகனங்களில் நீண்டதூரம் செல்பவர்களுக்கு மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், சரக்கு வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் மிக அருகாமையில் இருப்பவர்கள் பாஸ்ட் டேக் மூலம் பெரும் சிரமப்படுவதாக தெரிவித்தனர். மேலும், சுங்கச்சாவடி கட்டணத்தை பிரிபெய்டு முறையிலோ அல்லது கார்டு சிஸ்டம் மூலமாகவோ வசூலிக்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.

அதேபோல ஒருசில வாகனங்களில் ஓட்டியுள்ள பாஸ்ட் - டேக் ஸ்டிக்கர்கள் சில மாதங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. மீண்டும் புதிய டேக் வாங்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் குறைகளை களைவதற்கு பல மணி நேரங்கள் ஆவதாகவும் எளிய வசதிகளை செய்து தாராமல் பயண நேரத்தை அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. வாகன ஓட்டிகள் மத்தியில் தற்பொழுது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணைபடி இனிமேல் பாஸ்ட் டேக் வாங்குபவர்களுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுமாம்.

ஒருவர் 500 ரூபாய் கொடுத்து புதிதாக டேக் வாங்கினால் அதில் 200 ரூபாய் இருப்பு தொகையாகவும் 100 ரூபாய் டேக்காகவும் மீதமுள்ள 200 ரூபாய் மட்டுமே அவர் பயன்படுத்த முடியும் என பாஸ் டேக் பிரிவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மீட்பு வாகனம், கிரேன் வாகனம், குடிநீர், ,கழிப்பிட வசதி, இலகுரக, மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடங்கள், சரக்கு வாகனங்களை எடையை கண்டறிவதற்கான வசதி உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com