ஏலகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஏலகிரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் கோடை விழாவில் பரதநாட்டியம் உட்பட கலாசாரம் சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் நடைபெற்ற கோடை விழாவில் கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து மாடலிங் துறையை சார்ந்த இளம்பெண்கள் அரை குரை ஆடையுடன் மேடையில் வலம் வந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு சுற்றுலாவிற்கு வந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.