நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் 2000 நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு!

நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் 2000 நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு!
நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் 2000 நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு!

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் 2000 நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோமாளம்பேட்டை பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இந்த ஆண்டு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக சென்ற பொழுது, உங்களுடைய செலவில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நீங்கள் கொட்டகை அமைத்து தந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் நெல் மூட்டைகளை சேமிப்பதற்கான கொட்டைகளை அமைத்துள்ளனர். தற்போது பத்து நாட்களுக்கு மேலாக 2000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இப்பகுதியில் அடுக்கப்பட்டு விவசாயிகளால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 10 நாட்கள் கடந்த போதிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் மழை பெய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.



இது குறித்து விவசாயிகள் கூறும் பொழுது, கடந்த சில நாட்களாக மழை பெய்த போதும் நெல்லை முழுமையாக பாதுகாத்து வைத்துள்ளதாகவும், தொடர்ந்து பாதுகாக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை பாதுகாப்பதற்காக தார்ப்பாய்களை வாடகை எடுத்து பாதுகாத்து வருவதாகவும், இந்நிலையில் பாதிக்கப்படாதவாறு உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக நெல்லை கொள்முதல் செய்தால் மட்டுமே தாளடி சாகுபடி செய்ய முடியும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com