
குடியரசுத் தினத்தன்று தடையை மீறி டெல்லிக்குள் நுழைவோம் என எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாளை மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் திடமாக உள்ள விவசாயிகள், 6 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர்.