விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட மிகு குறைவான அளவிலேயே பெய்துள்ளது. இதனால் நீரின்றி பயிர்கள் கருகுவதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மரணமும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது