விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
அரசு போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளதால் பலபகுதிகளில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் முழுதாக அடைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வளைதளங்களில் ஹேஸ்டாக்குகளை உருவாக்கி கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், #Strike4Farmers என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ஹேஸ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

