குறைந்து போன மிளகு விலை - வேதனையில் விவசாயிகள்

குறைந்து போன மிளகு விலை - வேதனையில் விவசாயிகள்
குறைந்து போன மிளகு விலை - வேதனையில் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு மற்றும் கேசிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு மலைகிராமங்களில் மிளகு பெருமளவு பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது அறுவடை செய்யப்படும் மிளகு விலை, தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக விவசாயிகள்  கவலை தெரிவிக்கின்றனர். கிலோ ஒன்றிற்கு ஐநூறு ரூபாய் வரை விலை போன மிளகு, தற்பொழுது 300 ரூபாயாக குறைந்து நஷ்டமடைந்து வருவதாக கூறுகின்றனர். இந்த விசயத்தில் அரசு கவனம் செலுத்தி, கர்நாடகாவைப்போல மிளகு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை உருவாக்க மிளகு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய ஏற்பாடுகள் செய்யும் போது கிலோ ஒன்றிற்கு ஐநூறு ரூபாய் என ஒரே விலை நிர்ணயம் செய்து, மிளகு விவசாயத்தை காக்க முடியும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றனர். இது குறித்து பாரதிய கிசான் விவசாய சங்க நிர்வாகிகளிடம் கேட்டபொழுது, நறுமனப்பொருட்கள் ஆராய்ச்சி நிலைய திட்டம் கிடப்பில் உள்ளதால் கூட்டமைப்பு உருவாக்குவதில் சிக்கல் உள்ளதாகவும், நறுமனபொருட்கள் ஆராய்ச்சி நிலையம் விரைவில் அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com