தமிழ்நாடு
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம்: பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம்: பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களுக்கு பட்டா கேட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு, பாச்சலூர், பால்கடை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் தங்கி, அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிக்கு வனத்துறை மற்றும் வருவாய்துறையினர் பட்டா தர மறுப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், பின்னர் கோரிக்கை மனுவினை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர்.