\
பெண் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம்

பெண் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம்

பெண் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம்
Published on

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் பெண் வேடமிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 32 வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான போராட்டத்தை நடத்திவரும் இவர்கள் இன்று பெண் வேடமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com